இலங்கை வானொலிகளில் பலர் இருந்தும் ,வாழ்ந்தும் ,வளர்ந்தும் சென்றுள்ளார்கள்.அதில் ஒரு சிலர் தங்கள் வாழ்வாதார நலனுக்காக வெளிநாடு பயணமானார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்களுக்காக தங்களை தியாகம் செய்துள்ளார்கள் .அவர்களில் ஒருவர் தான் பரணீதரன் முருகேசு.
சுவர்ண ஒலி,சூரியன் ,வெற்றி ,வர்ணம் ,தமிழ் என வானொலிகள் பலவற்றில் கிடைத்த அனுபவத்துடன் தற்போது அரசியல் பக்கம் வந்துள்ளார் .
அரசியலுக்கு தேவை பேச்சு அது தாராளமாகவே அவரிடம் உள்ளது .அவர் தனது அரசியல் பயணத்தை அமைச்சர் மனோ கணேசனுடன் ஆரம்பித்தார் .தனது அரசியல் பயணம் தொடர்பாக அவரது முகப்புத்த்க பக்கத்தில் அவர் இட்ட பதிவு .
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்” என் உதிரத்தில் அரசியலை உற்புகுத்திய அமைப்பு என்பேன்.எனது தந்தையின் அரசியல் கல்விக்கூடம் அது.
அமரர் பழனிச்சாமிப்பிள்ளை, அவரது புதல்வர் அமரர் வி.பி கணேசன் ஆகியோருடன் களனிவெளி பிராந்தியத்தில் அரசியல்,தொழிற்சங்க
செயற்பாடுகளில் எனது குடும்பத்தினர் (பாட்டனார் ஜ.தொ.கா மாவட்ட தலைவர்) ஈடுப்பட்டு வந்திருக்கும் நிலையில்.
இன்றைய “ஜனநாயக மக்கள் முன்னணி” இல் தேசிய ரீதியிலான பொறுப்புமிக்க “பிரச்சார செயலாளர்” பதவிக்கு என்னை தெரிவு செய்த கட்சி தலைவர்,பிரதி தலைவர் உள்ளிட்ட அரசியல் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள்.
(ஒரு அரசியல் குடும்பத்துடன் மூன்றாவது தலைமுறையும் நம்பிக்கையுடன் பயணிக்கும் உறுதிமிக்க பிணைப்பு….)
“ஜனநாயக மக்கள் முன்னணி” இல் தேசிய ரீதியிலான பொறுப்புமிக்க “பிரச்சார செயலாளர்” பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட
பரணீதரன் முருகேசுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.