நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு செயலமர்வுகள் நடாத்தப்பட வேண்டும் -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்



இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்படும் அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவை முன்னிட்டு நியமிக்கப்பெற்ற தமிழ்மொழி மூல நடுவர்குழுவின் தலைவராகச் செயற்பட்டுள்ளீர்கள். இவ்வாண்டு போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தங்கள் பொது அபிப்பிராயம் என்ன?

2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மிகத்தரமானவற்றுக்கான விருதுகளைத் தெரிவூ செய்வதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் இவ்விருதுத் தெரிவூக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றிய பழைய அனுபவங்களோடு ஒப்பிடும்பொழுது இவ்வாண்டில் தமிழ்மொழி மூலமான விண்ணப்பங்கள் தொகையளவில் பெருவாரியாக அதிகரித்துள்ளதைக் காணமுடிந்தது. சில பிரிவூகளில் சிங்கள மொழி மூலவிண்ணப்பங்களை விடவூம் தமிழ்மொழி மூல விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தன. புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் சிலஇம்முறை மிகுந்த ஆர்வத்துடன்அதிகளவிலான விண்ணப்பங்களை அனுப்பியிருந்தன.மேலும் முன்னைய சில ஆண்டுகளில் அனைத்து உபபிரிவூகளுக்கும் தமிழ்மொழி மூல விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. அவ்வாறில்லாமல் இவ்வாண்டு அனைத்துப் போட்டிப் பிரிவூகளுக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இது 2018 இல் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் பரந்துபட்ட அளவில் வெவ்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியிருந்தமையையே காட்டுகின்றது.

தொகையளவில் அதிகம் என்று குறிப்பிடுகின்றீர்கள். அப்படியாயின்அவற்றின் தரம் குறித்து தங்கள் அபிப்பிராயம் என்ன?

போட்டிக்கென அனுப்பி வைக்கப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகள் பாராட்டப்பெறும் தரத்தில் அமைந்திருந்தன. நடுவர் குழுவானது பல்விதமானஆளுமையாளர்களின் சங்கமமாக இருந்தது. தொடர்பாடல்துறை மற்றும் ஊடகத் துறைப் பேராசிரியர்கள், விரிவூரையாளர்கள்,முன்னாள் தொலைக்காட்சிப் பணிப்பாளர்,அரச தொலைக்காட்சிஆலோசனைக் குழு உறுப்பினர்,ஊடகவியலாளர்,தொழில்நுட்ப ஆற்றலாளர்,முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,குறும்பட இயக்குநர் என்று பல்வித ஆளுமையாளர்கள் நடுவர் குழுவில் இருந்தனர். இவ்வாறு வேறுபட்ட ஆளுமையாளர்களதும் பல்விதமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய சில படைப்புக்கள் போட்டிக்காகப் பார்வைக்கு வந்தன என்பது உண்மையே.இது குறித்து மகிழ்ச்சி அடைய முடியூம். எனினும் அவை தொகையில் மிக மிகக் குறைந்த அளவினவாகவே இருந்தன. அதாவது நல்லதொரு விடயத்தை சிறந்த தொழில்நுட்ப உத்தி, ஒலி,ஒளிப்பதிவூ,கலையாக்கம்,செவ்விதாக்கம் முதலியவற்றைப் பயன்படுத்தி புதுமையாகத் தயாரிக்கப்பட்டதரமான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை சொற்பமானதாகவே இருந்தது.

விடயம் என்ற உள்ளடக்கத்தைத்தானே சுட்டுகின்றீர்கள். இம்முறை தெரிவூக்கு வந்த நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பொதுவாக சஞ்சிகைப் பிரிவூ, ஆவணப் பிரிவூ போன்ற பிரிவூகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போட்டிக்கான நிகழ்ச்சிகளில் பல வழமையான பிரச்சினைகளை அலசுவனவாகவே இருந்தன. பல நிகழ்ச்சிகள் சமையல், ஒப்பனை, பெருநாள்களின் கொண்டாட்டங்கள் எனும் எல்லையைக் கடக்கவில்லை. எனினும் சில படைப்புக்கள்,இதுவரை காலமும் கவனக்குவிப்பைப் பெறாத நகர குப்பைக் கழிவகற்றுதல், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறுதலிலுள்ள சவால்கள் முதலிய உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தன.மேலும் தொலைக்காட்சிகளில் இதுவரை பேசாப்பொருள்களாக இருந்த மசாஜ் நிலையங்கள், கராஜ் தொழிலாளர் அவலம் முதலிய விடயங்கள் பலவற்றைதுணிகரமாகப் பேசி அளிக்கை செய்யப்பட்ட படைப்புகள் இவ்வாண்டு பார்வைக்குவந்தன என்பது மகிழ்ச்சிக்கு உரியது.

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு மற்றும் படைப்பாக்கம் குறித்த தங்கள் கருத்தென்ன ?

இது குறித்து தமிழ் ஒளிபரப்பாளர்கள் நீண்ட அக்கறை செலுத்த வேண்டும் என்பது புலனாகின்றது.அதாவது தமிழ் நிகழ்ச்சிகளின் தொழில்நுட்பத்தரம் பாராட்டும் படியாக இல்லை. கடந்த பல வருடங்களாக விருதுபெற்றுவரும் சில தொடர்நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் போட்டிக்கு வந்தன. ஒளிப்பதிவூ செய்யப்படும் கலையகத்தின் தரத்தினால் குறிப்பிடத்தக்க கவனிப்பை அவை பெறுகின்றன. எனினும் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களோஅடுத்த கட்டப் பாய்ச்சல்களோ இல்லை. எமக்குச் சமாந்தரமாக சிங்கள மொழி மூல நடுவர் குழு சிங்கள தொலைக்காட்சி விருதுத்தெரிவூகளை மேற்கொண்டது. அவர்களுடனான கலந்துரையாடலின்போது வெளிவந்த உண்மையை இவ்விடம் பதிவிடுவது அவசியமானது. தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட தரமான ஒளிப்பதிவூ மற்றும் தொழில்நுட்பவிடயங்கள் சிங்களக் கலைஞர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அவற்றுக்கான விருதுகளும் – தமிழ்மொழி மூலப் பிரிவூ எனினும் – அவர்களுக்குச் செல்வது இயல்பானதே.

இவ்விடத்தில் தமிழ் ஒளிபரப்புத்துறையினர்க்கு நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன். அவர்கள் இந்த ஒளிப்பதிவூ மற்றும் தொழில்நுட்பத் துறைகளில்ஆர்வம் மிக்க இளைஞர்களை ஈடுபடுத்தி நன்கு கற்பிக்கவேண்டும். அவர்கள் ஆளுமை மேம்படும் வகையிலான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தேவையேற்படின் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பங்களையூம்அவர்களுக்கு நல்க வேண்டும். நம் ஒளிபரப்புத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகவூம்அவசியமானதாகும்.

இவ்விடத்தில் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் முதலியோர்க்கு ஏதேனும் தெரிவிக்க
விரும்புகின்றீர்களா?

நிச்சயமாக. நமது தயாரிப்பாளர்கள் முதலில் தமிழக சின்னத்திரைகளின் தழுவல் பிரதிகளாக நமது நிகழ்ச்சிகளைக் கருதும் மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும். தமிழ்நாட்டுத் திரைபடக் காட்சிச் சுருக்கங்களைத் தொகுத்து வழங்குவதோ, வெளிநாட்டு விளையாட்டுச் செய்திச் சேவைகளிலிருந்து அப்படியே தரவிறக்கம் செய்து குரல் கொடுப்பதோ இலங்கை ஒளிபரப்புத் துறையின் வளர்ச்சி ஆகாது என்பதை ஒளிபரப்புத் துறையில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இணையத்திலிருந்தும் பிறநாட்டு ஒளிபரப்புச் சேவைகளிலிருந்தும் அப்படியே சில நிகழ்ச்சிகளையோ, பகுதிகளையோ பயன்படுத்திவிட்டு இலங்கை ஒளிபரப்புத் துறைக்கான அதியூச்ச விருதை எதிர்பார்ப்பது எவ்வளவூ தூரம் ஆரோக்கியமானது என்பதை யாவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலும் போட்டிக்கு விண்ணப்பம் அனுப்பும் தயாரிப்பாளர்கள் முதலில் விதி; மற்றும் நிபந்தனைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இம்முறை எமக்கு மிகவூம் சவாலாக அமைந்தது எதுவென்றால் பல தயாரிப்பாளர்கள் தம் நிகழ்ச்சிகளை பொருத்தமற்ற போட்டிப் பிரிவூக்கு விண்ணப்பித்து இருந்ததுதான். அதாவது ஒருநிகழ்ச்சியை அதன் தயாரிப்பைக் கருத்திற்கொண்டு இது சஞ்சிகையா, ஆவணமா, அறிக்கையிடலா? என்பதைச் சரியாகஉணர்ந்து பொருத்தமான பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இம்முறை விண்ணப்பதாரிகள் பலரும் இவ்விடயத்தில் தவறிழைத்துள்ளனர். அதாவது பிரிவூ மாறிமாறி வந்த விண்ணப்பங்கள் இவ்வாண்டும் குறிப்பிடத்தக்க அளவூகாணப்பட்டன.


அதேபோல சில பிரிவூக்கான நிகழ்ச்சிகளுக்குத் திணைக்களத்தில் குறித்த கால எல்லை வழங்கப்பட்டுள்ளதையூம் விண்ணப்பதாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை. 10 நிமிடத்துக்கு மேலேஅமைய வேண்டும் என நிபந்தனை வழங்கப்பெற்ற நிகழ்ச்சிப் பிரிவூக்கு வந்த சில ஒளிப்பேழைகள் 5 நிமிடம் கூட இருக்கவில்லை. எனவே அவற்றை நிராகரிக்க வேண்டி ஏற்படுகிறது. இனிவருங் காலங்களில் இதனையூம் தயாரிப்பாளர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

அடுத்து குறித்த jDATA Format மூலம் அனுப்பப்படும் இறுவெட்டுகள் நிராகரிக்கப்படுவதுடன் DVD Format மூலம் மாத்திரமே தயாரிப்புக்கள் சமப்பிக்கப்படவேண்டும். மேலும், நேர்காணல், ஒளிப்பதிவூ, தயாரிப்புதொடர்பில் எழத்தக்க நுட்பமான தொழில்நுட்பச் சிக்கல்களையூம் விண்ணப்பதாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதையூம் அவதானிக்க முடிந்தது. மொத்தத்தில் விண்ணப்ப அறிவூறுத்தல்களைச் சரியாகக் கடைப்பிடிக்காமை எமது விருது தெரிவூக் குழுவின் சுமையைப் பெருமளவில் அதிகரிக்கச் செய்தது.இனிவருங் காலங்களில் இதனை நிவர்த்திசெய்தல் அவசியமாகும். குறித்த பொருத்தமான பிரிவில் நிபந்தனைகளுக்கு அமைவாக அடுத்துவரும் வருடங்களில்தயாரிப்பாளர்கள் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது எமது பெருவிருப்பாகும்.

தாங்கள் ஒரு மொழித்துறைப் பேராசிரியர். அறிவிப்பாளர்களின் மொழிப்பிரயோகம் திருப்திகரமாக உள்ளதா?

ஒரு காலத்தில் இலங்கை அறிவிப்புத் துறை உலக அரங்கில் திசைகாட்டியாக இருந்து கோலோச்சியதை நாம் மறத்தலாகாது. இத்துறையில் தமிழ்நாட்டவர்களுக்கே எமது அறிவிப்பாளர்கள்தாம் வழிகாட்டிகள்.ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. அறிவிப்பிலும் தழிழக ஊடகச் செல்வாக்கே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆங்கிலமொழி மூலக் கல்வி காரணமாக சாதாரண உரையாடலிலும் ஆங்கிலக் கலப்பே மிகுதியாக உள்ளது. எனவே அங்கு ஊடகங்களும் ஆங்கிலக் கலப்புற்ற இம்மொழியையே பயன்படுத்துகின்றன. ஆனால் தாய்மொழி மூலக் கல்வி வழங்கப்படும் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. சாதாரண பொதுமக்கள் பாவனையில் தமிழ்ப்பிரயோகங்களே அதிகம். ஆனால் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் தாம் தழிழகச் செல்வாக்கால் ஆங்கிலம் மிகுதியாகக் கலப்புற்ற ஒருவிதமான மொழிப்பிரயோகத்தை சமுதாயத்தினுள் புகுத்த முனைகின்றனர். இம்முறைகூட போட்டியில் கலந்துகொண்ட ஒருசில நிகழ்ச்சி அறிவிப்புகளை நோக்கும் போது இவர்கள் தமிழ் அறிவிப்பு விருதுக்கு இவற்றை அனுப்பினார்களா இல்லை ஆங்கில அறிவிப்பு விருதுக்கு இவற்றை அனுப்பினார்களா என்ற ஐயமே மிகுந்தது. இதனைக் கூறுவதனால் மக்கள் வழக்கிலில்லாத தனித்தமிழ் நடையில் அறிவிப்புச் செய்ய வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதாகக் கருதவேண்டாம். இலங்கை இரசிகர்களுக்கு புரியூம்படியான அவர்கள் வழங்குகின்ற ஆங்கிலக் கலப்புக் குறைந்த நடையில் – பொருத்தமற்ற அங்க சேட்டைகளைத் தவிர்த்து – அறிவிப்பு மேற்கொள்வதே சாலச்சிறந்தது.

பொதுவாக தமிழ்த் தொலைக்காட்சிகள் நாடகத் துறையில் அக்கறை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஆண்டுதோறும் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நிலைமை எப்படி?

இவ்வாண்டும் மாற்றமேதும் இல்லை. தமிழகத்து தொடர் நாடகங்களை மறுஒளிபரப்புச் செய்யூம் ஊடகக் கலாசாரம் ஒழியூம்வரை இந்நிலைமை மாறும்போலத் தெரியவில்லை. இவ்வாண்டு நாடகப்பிரிவில் ஓரங்க மற்றும் தொடர் நாடகப் பிரிவூகளில் ஒருசில விண்ணப்பங்களே வந்திருந்தன. சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல்,சிறந்த இயக்கம் எனப் பல விருதுகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தாலும் அவற்றுக்குரிய உயர் தரத்தில் வந்த ஒருசில நாடகங்களும் அமையவில்லை என்பதே உண்மை. எனவே பாராட்டும்படியாக அமைந்த ஒருசில பிரிவூகளுக்கு மட்டும் விருதுகளை சிபார்சு செய்யவேண்டி நேர்ந்துள்ளது. அதுவூம் அத்துறைகளிலான உச்சகட்ட திறமை என விருதாளர்கள் திருப்தி அடையமுடியாது. இவ்விருதை முதற்படியாகக்கொண்டு நாடகத்துறையில் பயணிக்க இன்னும் எவ்வளவோ தூரம் உள்ளதென்பதை மனங்கொண்டு தம்மை அவர்கள் மென்மேலும் வளர்க்க வேண்டும்.

இன்றைய விழாவைப் பற்றி………..?

இன்று உலக தொலைக்காட்சி தினமாகும். வருடந்தோறும் இத் தொலைக்காட்சி தினமாகிய நவம்பர் 21 அன்றுதான்இந்த அரச விருது வழங்கல் வைபவம் இடம்பெறுவது வழக்கம். இவ்வாண்டு ஜனாபதித் தேர்தல் நவம்பர் 16இடம்பெற்றதால் 21 அன்று இவ்வைபவத்தை வைக்கலாமா.. இல்லையா… என்று சிந்தித்தாலும் பின்பு அதேதினத்தில் வைப்பதுதான் பொருத்தமானது என்பது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானமாக இருந்தது. அதனால் அரச விருது வழங்கல் விழாவானது மாலினி பொன்சேகா ஆகிய கலையூலக உயர் ஆளுமைகள் விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இன்று மாலை இடம்பெறவூள்ளது.

இனிவரும் காலங்களில் விருது வழங்கும் செயற்பாடு மேலும் காத்திரமானதாக அமைய இன்றைய தெரிவூக்குழுவின் தலைவராக நீங்கள் என்ன கருத்துக்களை முன்மொழிகின்றீர்கள்?

இவ்வைபவத்தை ஆண்டுதோறும் நடாத்திவரும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஏலவே நாம் ஒரு சில முன்மொழிவூகளை வழங்கியூள்ளோம். விருதுக்கான அறிவித்தல் வெளியிடப்படும்பொழுது தொலைக்காட்சி நிறுவனங்களின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையூம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையூம் அழைத்துஆரோக்கியமான செயலமர்வூகளை நடாத்தும்படியாக நாம் ஆலோசனை வழங்கியூள்ளோம். இது மிகவூம் அவசியமானதாகும். மேலும் பல்லாண்டுகளாக சீரமைக்கப்படாது உள்ள போட்டிகளுக்கான விதி மற்றும் நிபந்தனைகளில் காலத்துக்கு ஏற்றதான மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையூம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்தபணிப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளோம். அவ்வாறே மொழிபெயர்ப்பில் காணப்படும் விளக்கக்குறைவூ பற்றியூம் எடுத்துக் கூறியூள்ளோம். இவை இனிவருங் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பது எமது நம்பிக்கை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!